People blocked the road with empty jugs near Perambalur for drinking water!

பெரம்பலூர் அருகே உள்ள வேலூர் கிராமத்தில் உள்ள ஒரு தெருவில் கடந்த ஒரு வாரமாக கேட் வால்வு பழுது காரணமாக குடிநீர் விநியோகம் முறையாக செய்யப்படாமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை சுமார் 7.45 மணி அளவில் பெரம்பலூர் செட்டிகுளம் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்ற

னர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!