எம்.ஏல்.ஏக்களுக்கு கார் அறிவிப்பு வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பெரம்பலூர் தொகுதி மக்கள் பாராட்டு!

schedule
2026-08-21 | 08:28h
update
2026-08-21 | 08:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

People of the Perambalur constituency praise Chief Minister Joseph Vijay for announcing cars for MLAs!

தமிழக சட்ட மன்ற கூட்டத் தொடரில் நேற்று விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தொகுதியில் தொய்வில்லாமல் பணியாற்றவும், எம்.எல். ஏக்கள் தொகுதி சென்றுவரும் செலவினங்கள் அவர்களது சொந்த பணத்திலோ, அல்லது சம்பளத்திலோ ஒரு பகுதியை செலவி வேண்டும். இதனால் பணத்தை அழித்த எம்.எல்ஏக்கள் ஏராளம். மேலும், வாகன பாராமரிப்பு, டிரைவர் செலவு ஆகியவை வாங்கும் ஒரு லட்சம் ஒரு பகுதி செலவாகிவிடும். இதனால் எம்.எல்.ஏக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்ததை மறக்க முடியாது.  எம்.எல்.ஏவிறகு சம்களம் ஒரு லட்சம் என இருந்தால் அதை 30 நாட்களுக்கு பிரிக்கும் போது நாள் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம் என வரும், இதில், கைசெலவு, வண்டி எரிபொருள் செலவு, உடன் வரும் கட்சியினர் அல்லது விருந்தினர்களுக்கு செலவு என செய்யும் போது எம்.எல்.ஏ கையில் மிஞ்சாது. டிரான்ஸ்பர், திட்டப்பணிகளில் கமிசன், சட்டத்திற்கு புறம்பாக வேலை வாங்கி கொடுத்தால் போன்றவைகளை செய்தால் மட்டுமே இந்த செலவுகளை ஈடுகட்டுவதுடன் கட்சியினர் வீட்டு விஷேசங்கள், தன்னை தேடி வருபவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை தங்கு தடையின்றி செய்ய முடியும். தற்போது முதலமைச்சர் அறிவிப்பில் ஒரு கார், அதோடு அதற்கு ரூ. 75 ஆயிரம், மற்றும் உதவியாளர் சம்பளம் ரூ. 25 ஆயிரம் அரசே ஏற்று வழங்கும் போது எம்.எல்.ஏ ஒரு 5 ஆண்டுகளில் சுமார்  ரூ. 60 லட்ச ரூபாய் செலவில் இருந்து தப்பிப்பதோடு, அவர் வாங்கும் சம்பளத்தை அவருக்கோ, அல்லது குடும்பத்தினருக்கோ முழுமையாக பயன்படுத்த முடியும். அதை அறிந்து அனைத்து தொகுதி எம்.எல்.ஏக்களுக்கும் கார் மற்றும் மாதம் ஒரு லட்ச ரூபாய் செலவிற்கு வழங்கும் திட்டத்தை பொதுமக்கள் வரவேற்பதோடு, முதமைச்சரை பாராட்டவும் செய்கின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.08.2026 - 09:02:29
Privacy-Data & cookie usage: