பெரம்பலூரில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 1092 வழக்குகளுக்கு தீர்வு

schedule
2017-12-10 | 12:07h
update
2026-07-04 | 12:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

People’s court in Perambalur settled for 1092 cases

பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பாலராஜமாணிக்கம் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது.

Advertisement

மகிளா நீதிமன்ற நீதிபதி என்.விஜயகாந்த், தலைமை நீதித்துறை நடுவர் எம்.சஞ்சீவி பாஸ்கர், சார்பு நீதிபதி எஸ்.ஜெயந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி எம்.வினோதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.மகேந்திரவர்மா, கூடுதல் மகிளா நீதித்துறை நடுவர் கே.மோகனப்பிரியா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மணிவேல், ஓய்வு பெற்ற நீதித்துறை நடுவர் கண்ணையன், ஆகியோர் கொண்ட அமர்வானது பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளையும், தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகளில் நிலுவையில் உள்ள வாராக் கடன் பொறுத்த வழக்குகளையும், விசாரித்து தீர்வு வழங்கியது. 118 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் 2 கோடியே 94 லட்சத்து 17 ஆயிரத்து 600க்கும் தீர்வு காணப்பட்டது.

55 சிவில் வழக்குகளில் 2 கோடியே 16 லட்சத்து 79 ஆயிரத்து 304 ம் , 844 சிறு குற்ற வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது. ஆக 58 லட்சத்து 44 ஆயிரத்து 15க்கு தீர்வு காணப்பபட்டது.

வழக்கறிஞர்கள் , நீதிமன்ற பணியாளர்கள், காவல்துறையினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 12:05:47
Privacy-Data & cookie usage: