People’s Grievance Day Meeting: Perambalur Collector provided welfare assistance worth Rs 5.7 lakh!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 77 பயனாளிகளுக்கு ரூபாய் 5.7 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கற்பகம் வழங்கினார்

இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டு மனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 276 மனுக்கள் பெறப்பட்டது.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 10 நபர்களுக்கு ரூ.1,70,000/- இயற்கை மரண உதவித்தொகையும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.53,250/- மதிப்பிலான ஊன்றுகோல்களையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,06,380/- மதிப்பிலான எலக்ட்ரானிக் பிரெய்லி ரீடர்களையும், 44 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டைகளையும் வழங்கினார்கள்.

மேலும் சென்ற வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தவர்களுக்கு உடனடியாக தீர்வுகண்டு இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 1 நபருக்கு ஆதரவற்ற விதவைச்சான்றினையும், 1 நபருக்கு முதியோர் ஓய்வூதியத்திற்கான ஆணையினையும், 1 நபருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான ஆணையினையும், கல்வி கடனுதவி வேண்டி விண்ணப்பித்த 1 நபருக்கு ரூபாய் 2.40 இலட்சம் கல்வி கடனுதவிக்கான ஆணையுடன் முதல் தவணையாக ரூபாய் 60,000த்திற்கான காசோலையினையும், 1 மாற்றுத்திறனாளிக்கு சலவை பெட்டி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி, சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!