People’s grievance meeting from Oct. 4: Petitions will be accepted directly: Perambalur Collector!

Photo Credit : Perambalur.nic.in
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி, கொரோனா தொற்று நோய் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 04.10.2021 முதல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. அதுசமயம், மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.