இடைத்தேர்தல் வெற்றி; உள்ளாட்சி, 2021 சட்டசபை தேர்தலுக்கு, மக்கள் அங்கீகாரம்

முதல்வர் பழனிசாமி

schedule
2019-11-08 | 15:32h
update
2019-11-08 | 16:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

People’s recognition to AIADMK by local government and 2021 Assembly Elections, by-election

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்றதற்காக நடந்த நன்றி அறிவிப்புக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும், அ.தி.மு.க., தான் ஆட்சி அமைக்கும். பலம் பொருந்திய அ.தி.மு.க., கூட்டணியிடம் யாரும் நெருங்க முடியாது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்கள், ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர். உள்ளாட்சி, 2021 சட்டசபை தேர்தலுக்கு, இடைத்தேர்தல் மூலம் மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர். ஆக்கப்பூர்வமான கருத்துகளை கூறாமல், போராட்டங்களை ஸ்டாலின் தூண்டிவிடுகிறார். ஸ்டாலினின் எண்ணங்கள் அனைத்தும், இடைத்தேர்தல் மூலம் நிராசை ஆகி உள்ளன.

Advertisement


தமிழக அரசியலில் வெற்றிடமே இல்லை என்பதை, இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது. போக்குவரத்துத்துறை, சமூக நலத்துறை ஆகியவற்றின் மத்திய அரசின் விருதை தமிழகம் வென்றுள்ளது. மேலும், கல்வித்துறையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட மத்திய அரசின் விருதுகளை தமிழகம் வென்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.10.2026 - 02:27:02
Privacy-Data & cookie usage: