பெரம்பலூர்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை, ரூ. 1 லட்சம் அபராதம்: நீதிமன்றம் தீர்ப்பு!

schedule
2024-11-22 | 02:32h
update
2024-11-22 | 02:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 10 years in prison and Rs. 1 lakh fine for sexually harassing a girl: Court verdict!

Advertisement

பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சீராநத்தத்தை சேர்ந்த வடிவேலு மகன் மணி(56) என்பவர் மீது போக்சோ வழக்கு Cr.No.13/20 U/s 3 r/w 4 (2) POCSO Act பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையில் நேற்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவ்வழக்கின் குற்றவாளியான மணி என்பவருக்கு 10 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராத்தையும், அபராதத்தை கட்டத் தவறினால், மேலும் 1 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை, என பெரம்பலூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் மணியை சிறையில் அடைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.08.2026 - 18:55:30
Privacy-Data & cookie usage: