பெரம்பலூர்: மாவட்ட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம்; கலெக்டர் தகவல்!

schedule
2026-07-16 | 15:48h
update
2026-07-16 | 15:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 100% subsidy on drip irrigation for district farmers; Collector announces!

பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசு வழிகாட்டுதலின்படி, அனைத்து விவசாயிகளும் பயன் பெறும் வகையில் நுண்ணீர் பாசனம் செயல்படுத்திட 900 ஹெக்டருக்கு ரூ.540 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இத்திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (2 எக்டர் வரை) கணக்கிடப்பட்ட அடிப்படையில் 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஹெக்டர் வரை மானியம் அனுமதிக்கப்படுகிறது.

Advertisement

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், மண் மற்றும் நீர் ஆய்வு அறிக்கை, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போட் அளவு புகைப்படம் -2, சிறு/குறு விவசாயியாக இருப்பின் சிறு/குறு விவசாயி சான்று ஆகிய ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாகவோ அல்லது விவசாயிகள் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in/horti/mimis என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம். இந்த இணையதளம் மூலம் தங்களுடைய வயலில் சொட்டு நீர் அமைக்கவிருக்கும் தேவையான பரப்பிற்கு மானிய கணக்கீட்டை பாசன இடைவெளி (Drip Spacing) வசதியுடன் அறிந்து கொள்ளலாம்.

மேலும், இத்திட்டத்தில் ஏற்கனவே பயன் பெற்றுள்ள விவசாயிகள் தங்களுடைய மொத்த சொட்டு நீர் பாசன விண்ணப்ப தகவல்களையும் ஆதார் எண் (அ) நில புல எண் மற்றும் உட்பிரிவு எண் மூலம் அறிந்துக் கொண்டு பயன்பெறலாம். மேலும், சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் முடித்திருப்பின் அவர்களும் இத்திட்டத்தில் புதுப்பித்துக் கொண்டு பயன்பெறலாம். தெளிப்பு நீர் பாசனம் மூலம் ஏற்கனவே மானியம் பெற்ற விவசாயிகள் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தால், மானியத்தில் சொட்டு நீர் பாசனம் திரும்பவும் அமைத்துக் கொள்ளலாம்.

ஆகவே, அனைத்து சொட்டு நீர் பாசன தகவல்களையும் அறிந்து கொண்டு பாசன வசதிகள் அமைத்து இத்திட்டத்தில் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் நுண்ணீர் பாசன நிறுவனங்களை தாங்களாகவே தேர்ந்தெடுக்கும் வசதியும் உள்ளது. பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் தங்கள் பயிர் சாகுபடிக்கு நுண்ணீர் பாசன அமைப்புகளை ஏற்படுத்தி கூடுதல் வருவாய் பெற்று பயனடையுமாறு கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.07.2026 - 16:05:23
Privacy-Data & cookie usage: