பெரம்பலூர்: கால்நடைகளுக்கு 12 இலக்க டிஜிட்டல் எண்கள் டேக் அறிமுகம்; கலெக்டர் தகவல்!

schedule
2026-06-08 | 07:50h
update
2026-06-08 | 07:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 12-digit digital tag numbers introduced for livestock; Collector announces.

பெரம்பலூர் மாவட்டத்தில், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு 12 இலக்க காதுகுறி எண் பதிவு செய்து அதன் முழு விபரத்தையும் மின்னணு தகவல் மூலம் பதிவேற்றம் செய்திட தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள கால்நடைகளின் செயற்கை முறை கருவூட்டல், கால்நடை காப்பீட்டு விபரம், சினையுறு சதவிகிதம், கன்று ஈன்ற விபரம், கன்று பிறப்பு விகிதம், உரிமையாளர் பதிவு மற்றும் பெயர் மாற்றம், பருவத்திற்கேற்ப மேற்கொள்ளப்படும் கோமாரி நோய், தோல் கழலை நோய், அடைப்பான் நோய் ஆகியவற்றிற்கான தரவுகள் சேகரிக்கப்பட்டு கால்நடை பராமரிப்புத்துறை தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டத்தின் மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் போது உரிமையாளரின் கைபேசிக்கு வெளிப்படும் கடவுச்சொல் மூலம் கால்நடைகளின் முழு விபரம் பதிவேற்றம் செய்யப்படும்.

Advertisement

கால்நடைகள் கொள்முதல், கால்நடைகள் விற்பனை ஆகியவை மேற்கொள்ளப்படும் பொழுது கால்நடைகள் பற்றிய முழு விபரமும் கால்நடை வளர்ப்போர் தெரிந்துகொள்ளலாம். கால்நடை வளர்ப்போர் தங்களுக்கு வரும் கடவுச்சொல்லை பகிருமாறும், எனவே, கால்நடை வளர்ப்போர் மற்றம் உரிமையாளர்களிடம் கேட்கப்படும் விபரங்களை தெளிவாக தெரிவிக்க வேண்டுமென, கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.06.2026 - 07:54:18
Privacy-Data & cookie usage: