பெரம்பலூர்: கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரூ.1.16 கோடியில் 12 வாகனங்கள்; அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

schedule
2024-08-09 | 17:05h
update
2024-08-09 | 17:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 12 vehicles for officials including collector at Rs 1.16 crore; Minister Sivashankar flagged off the inauguration

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட 12 வாகனங்களை கலெக்டர் கிரேஸ் லால் ரிண்டகி பச்சாவ் தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

Advertisement

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2023-24 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கள அலுவலர்கள், செயல்படுத்தப்படும் பணிகளின் தரத்தை கண்காணிக்கவும் உரிய காலத்தில் முடித்திடுவதை உறுதி செய்யவும் கள ஆய்வு மேற்கொள்ளவும், இப்பணிகளை திறம்பட கண்காணிக்க ஏதுவாகவும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டடு, அரசு சார்பில் சுமார் ரூ.1.16 கோடி மதிப்பிலான 12 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டது.

அதனை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்த அவர், வண்டிகளுக்கான சாவிகளை அலுவலர்களிடம் வழங்கினார். சார் ஆட்சியர் சு.கோகுல், யூனியன் சேர்மன்கள் மீனா அண்ணாதுரை (பெரம்பலூர்), க.ராமலிங்கம் (வேப்பந்தட்டை), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), என்.கே. கிருஷ்ணமூர்த்தி (ஆலத்தூர்), நகராட்சித் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், அனைத்து பேரூராட்சித் தலைவர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 03:39:57
Privacy-Data & cookie usage: