பெரம்பலூர்: குரூப் 4  தேர்வை 14099 பேர் எழுதினர்; கலெக்டர் கற்பகம் நேரில் ஆய்வு!!

schedule
2024-06-09 | 13:51h
update
2024-06-09 | 13:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com
Perambalur: 14099 appeared for Group 4 exam; Collector Karpagam in person inspection!!
தமிழ்நாடு அரசுப்பணியார் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் தொகுதி 4 தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலுார் அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப்ப்பள்ளி மற்றும் குரும்பலூர் அரசு கலை மற்றும் அறியல் கல்லூரி உள்ளிட்ட தேர்வு மையங்களில் கலெக்டர் கற்பகம், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Advertisement

பெரம்பலூர் வட்டத்தில் 41 மையங்களில் 12,597 நபர்களும், ஆலத்தூர் வட்டத்தில் 04 மையங்களில் 1,077 நபர்களும், குன்னம் வட்டத்தில் 08 மையங்களில் 2,234 நபர்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 08 மையங்களில் 2,261 நபர்களும் என மொத்தம் 61 மையங்களில் 18,169 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 14,099 நபர்கள் தேர்வு எழுதினர். மீதமுள்ள 4,070 பேர் தேர்வு எழுத வரவில்லை.
அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. காவல்துறையின் சார்பில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தது. தேர்வு நடைமுறைகளை கண்காணிக்க 6 பறக்கும் படைகளும், 30 நடமாடும் குழுக்களும் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக தேர்வு மையங்களுக்கு சென்று வர அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.01.2026 - 15:52:02
Privacy-Data & cookie usage: