பெரம்பலூர்: தடை செய்த குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 2பேர் கைது; 32 கிலோ பறிமுதல்!

schedule
2025-09-15 | 16:01h
update
2025-09-15 | 16:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 2 arrested for selling banned gutka products; 32 kg seized!

பெரம்பலூர் மாவட்டம், பேரளி கிராமத்தில் போலீசார் நடத்திய சோதனையில், அதே கிராமத்தை சின்னதுரை மகன், செல்வம் (33), துரைராஜ் மகன் குமார் (42), ஆகிய இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து, 23.100 – கிலோ ஹான்ஸ் , 5.040 கிலோ கூல் லிப், 3-கிலோ விமல் பாக்கு மற்றும் 1.2 கிலோ V1-பான் மசாலா என மொத்தம் 32 கிலோ 340 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றமத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 15:15:19
Privacy-Data & cookie usage: