பெரம்பலூர்: அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்திய 2 பேர் கைது! போலீசார் நடவடிக்கை!

schedule
2025-02-02 | 14:00h
update
2025-02-02 | 14:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 2 people arrested for smuggling sand in a bullock cart without permission! Police take action!

பெரம்பலூர் அருகே மாட்டு வண்டியில் மணல் திருடுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி, குன்னம் போலீஸ் எஸ்.எஸ்.ஐ சங்கர் குழுவினர் அகரம் சீகூர் பகுதியில் சிறப்பு ரோந்து மேற்கொண்ட போது ரெட்டிகுடிகாடு கலை விமலா திருமண மண்டபம் அருகே வெள்ளாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணலை கடத்திக் கொண்டு வந்த 2 பேரில் ஒருவரை பிடித்து விசாரித்தபோது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் பாண்டுரங்கன் (46), ரெட்டிக்குடிக்காடு பகுதியை சேர்ந்த கொளஞ்சி மகன் சூர்யா (24) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து இருவர்களிடமிருந்து ரூ 3 ஆயிரம் மதிப்புள்ள 1/2 யுனிட் மணல் மற்றும் மாட்டுவண்டிகளையும், பறிமுதல் செய்தனர். பின்னர். நீதிமன்றத்தில், ஆஜர்ப்படுத்தி, சிறைக்காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

மேலும், தங்களது பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் திருட்டு, கள்ளச்சாராயம், கஞ்சா, போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.05.2026 - 19:09:25
Privacy-Data & cookie usage: