பெரம்பலூர்: தடை செய்யப்பட்ட குட்காவை சப்ளை செய்த 2 பேர் கைது; 23 கிலோ குட்கா பறிமுதல்!

schedule
2025-04-27 | 21:00h
update
2025-04-27 | 21:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 2 people arrested for supplying banned gutka; 23 kg of gutka seized!

பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரம் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாலிகண்டபுரம் – கீழப்புலியூர் செல்லும் சாலையில் பைக்கில் மூட்டையுடன் வந்த இருவரை பிடித்து போலீசார் சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வைத்திருப்பது தெரியவந்தது.

Advertisement

போலீசார் அவர்களிடமிருந்து, ஹான்ஸ் (15-கிலோ), விமல் பாக்கு (7.5-கிலோ) மற்றும் V1-பான் மசாலா (1.05-கிலோ) என மொத்தம் – 23.55 கிலோ குட்கா பொருட்களும், ரூ. 79,750/- ரொக்கம் மற்றும் பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒருவர் ராஜஸ்தான் மாநிலம், மஹாதேவ் மண்டிர் பஜிராவை சேர்ந்த சவ்சிங் மகன் ரத்தன் சிங் (38) என்பவதும் அவர் கவுள் பாளையத்தில் தங்கி இருப்பதும், மற்றொருவர் கவுள்பாளைத்தை சேர்ந்த துரைசாமி மகன் பாண்டியன் (53) என்பதும் தெரியவந்தது. இருவர் மீதும், வழக்குப் பதிவு செய்த மங்கலமேடு போலீசார், அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, சிறைக்காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும், என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 13:01:48
Privacy-Data & cookie usage: