பெரம்பலூர்: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை ; 50 ஆயிரம் அபராதம் நீதிமன்றத் உத்தரவு!

schedule
2023-12-06 | 14:18h
update
2023-12-06 | 14:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 20 years in prison for the boy who sexually assaulted the girl; 50 thousand fine court order!

பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 50000-/ அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2017 -ம் ஆண்டு பிலிமிசை கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகன் சுரேஷ், அதே ஊரை சேர்ந்த மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் 09/17 U/s 5 (m) r/w 6 of POCSO ACT 2012 506(i) IPC 376 (ii)(h) 376 (2)(m)-ல் வழக்கு பதிவு செய்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை முடிவிற்கு வந்தது.

இன்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சுரேஷ்-க்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் 50 ஆயிரம் அபராதமும் அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை எனவும் தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட குடும்பநல நீதிமன்ற நீதிபதி தனசேகரன் தீர்ப்பளித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 22:08:57
Privacy-Data & cookie usage: