21 இலவச வேலை வாய்ப்பு பயிற்சிகள்; பெரம்பலூர் ஐஓபி வங்கி அறிவிப்பு!

schedule
2026-03-24 | 12:23h
update
2026-03-24 | 12:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 21 Free Job Training Programs; Perambalur IOB Bank Announces!

வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கவும் சுயவேலை வாய்ப்பை அதிகரிக்கவும் மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் படி, பெரம்பலூரில், இந்தியன் ஒவர்சீஸ் வங்கி தனது சிநேகா அறக்கட்டளையின் மூலம் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் பல்வேறு தொழில் பயிற்சிகளை இலவசமாகவும், குறுகிய கால சிறப்பு மற்றும் செய்முறை பயிற்சியும், அனுபவமிக்க பிரத்யோக பயிற்றுநர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.

பயிற்சி வகுப்புகள் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை நடத்தப்படுகிறது. பயிற்சியின் போது இலவசமாக தங்கும் வசதியுடன், உணவு , இரு வேலை தேனீர், சிற்றுண்டி வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள், சீருடைகள் இலவசமாக தரப்படுகிறது. பயிற்சி முடிந்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பொருளாதார உதவி பெற சிறப்பான ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தொடர்புடைய வங்கிக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

Advertisement

2026 – 2027 ஆம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்டுள்ள பயிற்சிகள் விவரம்: பெண்களுக்கான தையல் பயிற்சி, எம்பிராய்டரி & ஃபேப்ரிக் ஓவிய பயிற்சி, பெண்களுக்கான அழகு கலை பயிற்சி, இருபாலருக்கும் ஃபாஸ்ட் ஃபுட் தயாரிக்கும் 12 நாட்கள், சிசிடிவி கேமரா, ஆண்களுக்கான சேவை பாதுகாப்பு அலாரம் மற்றும் ஸ்மோக் டிடெக்டர் அமைத்தல் குறித்து 13 நாட்கள் பயிற்சி.

ஆண், பெண் இருபாலருக்கும் காஸ்ட்யூம் ஜூவல்லரி தயாரிப்பு பெண்களுக்கு 14 நாட்கள் பயிற்சி , விவசாய தொழில் முனைவோர் பயிற்சி, காய்கறி நாற்றங்கால் மேலாண்மை மற்றும் சாகுபடி, மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களின் சாகுபடி 12 நாட்கள், போட்டோ பிரேமிங் மற்றும் லேமினேசன் 10 நாட்கள் பயிற்சி, கணினி கணக்கியல், காளான் வளர்ப்பு, சணல் பொருட்கள் தயாரிப்பு,

ஆண்களுக்கான பைக் பழுது நீக்கும் பயிற்சி, ஒட்டுநர் பயிற்சி, ஹவுஸ் ஒயரிங் பயிற்சி, ஏசி மற்றும் ஃபிரிட்ஜ் பழுது நீக்கல் பயிற்சி, வீட்டு உபயோக சாதனங்கள் பழுது நீக்கல் பயிற்சி, செல்ஃபோன் பழுது நீக்கல்,
கொத்து & கான்கிரீட் வேலை, பிளம்பிங், சுகாதார பணிகள் வழங்கபட உள்ளதாகவும்,

பயிற்சியில் சேர்வதற்கான தகுதி, 19 – 50 வயதுக்கு குறைவாகவும் , எழுத படிக்க தெரிந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கவேண்டும். ஆதார் அட்டை, ரேசன் அட்டை வங்கி புத்தகம், சாதி சான்றிதழ் / மாற்று சான்றிதழ் , பான் அட்டை, வறுமைக்கோடு சான்றிதழ் ஆகியவற்றின் நகல் மற்றும் 3 ஸ்டாம்ப் சைஸ் போட்டோ வுடன் விருப்பம் உள்ளவர்கள் எளம்பலூர் சாலை, சுப்ரமணியம் வளாகத்தில் அமைந்துள்ள ஐ.ஓ.பி வங்கியின் முதல் தளத்தில் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தங்களது பெயரை பதிவு செய்து பயிற்சியில் சேர்ந்து பயனடையுமாறு, 04328-277896, 9488840328 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும், அம்மையத்தின் இயக்குநர் வி.முருகையன் விடுத்துள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2026 - 22:30:35
Privacy-Data & cookie usage: