Perambalur: 235 kg of ganja worth ₹1.175 crore seized; 3 arrested, 3 escaped.
பெரம்பலூரில், நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில், பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணி, சப் – இன்ஸ்பெக்டர் வினோத்கண்ணன் உள்ளிட்ட போலீஸ் டீமிற்கு கார்களில் கஞ்சா கடத்திச் செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பெரம்பலூர் தண்ணீர்பந்தல் பகுதியில் வந்த கார்களை மடக்கிப்பிடித்தனர்.
அதனை, சோதனை செய்ததில், 235 கிலோ கஞ்சா கடத்தி கொண்டு வந்திருப்பதை கண்டுப்பிடித்து கைப்பற்றிய போலீசார் 2 கார்கள், 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். கார்களில் 6 பேரில் 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில் 3 பேர் தப்பி ஓடி தலைமறைவாகினர். கைப்பற்ற கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 17 லட்சத்து ,50 ஆயிரம் கைது செய்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை, ஷெனாய் நகரை அருண்குமார் (31), திருவள்ளூர் மாவட்டம், வயலூரை சேர்ந்த பிரதீப் (23), , திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கும்புளியை சேர்ந்த விக்னேஷ் (27) என்பது தெரியவந்தது. மூன்று பேரையும் கைது செய்த போலீசார் , நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த தப்பி ஓடிய 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு சட்டசபையில் நடந்த மானியக் கோரிக்கையின் போது எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி விடக்கூடாது என்பதற்காக போலீசார் இச்சம்பவம் குறித்து தெரிவித்தனர்.
ஹான்ஸ், குட்கா போன்ற பொருட்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும், தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் வழியாக கடத்தி வரப்படும் கஞ்சா பெரம்பலூர் மாவட்டத்தின் வழியாக பல மாவட்டங்களுக்கு பிரித்து கொடுக்கும் ஜங்சன் பாயிண்டாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.