பெரம்பலூர்: அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர்களை ஒட்டிய நாதக-வினர் 26 பேர் கைது!

schedule
2025-12-26 | 12:00h
update
2025-12-26 | 12:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 26 NTK members arrested for pasting Tamil Nadu stickers on government buses!

தமிழ்நாடு அரசின் சார்பில் இயக்கப்படும் போக்குவரத்து கழக பேருந்துகளில் அரசு போக்குவரத்து கழகம் என பெயரிட்டு இயக்கப்பட்டு வருகிறது. கடந்த பல மாதங்களாக விவாதாப் பொருளாகவும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தமிழ் அமைப்பினர் தமிழ் நாட்டு பேருந்துகளில் அரசு போக்குவரத்து கழகம் என்பதற்கு முன்பாக தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர்களை ஒட்டி அரசு போக்குவரத்து கழகம் பெயருக்கு முன்பு ஒட்டி போராட்டம் செய்தனர்.

Advertisement

அதே பாணியில் மதுரை, கோவை, குளித்தலை உள்ளிட்ட தமிழகத்தின் பல ஊர்களில் நாம் தமிழர் கட்சியினர் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர்ளை ஒட்டினர். இன்று மதியம், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பாலக்கரை பகுதிகளில் வந்த அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டி கோசங்கள் எழுப்பினர். போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதும் சிறு சிறு குழுக்களாக பிரிந்து வந்து அரசு பேருந்துகளில் ஸ்டிக்கர்களை ஒட்டிய மாநில ஒருங்கிணைப்பாளர் கீர்த்திவாசன் உள்பட சுமார் 26 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதனால், புதிய பேருந்து நிலையம் பாலக்கரை பகுதிகளில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேராளவிற்கும், கர்நாடகவிற்கும் KSRTC யாருக்கு சொந்தம் என நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 15:21:27
Privacy-Data & cookie usage: