Perambalur: 269th Guru Puja of the great warrior Azhagumuthu Kone; Leader N. Muthiah Yadav to participate; invitation extended by the Aayar Makkal Peravai!
பெரம்பலூரில் நாளை ஜுலை.11ம் தேதி முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரரும், மாமன்னனும், ஆயர் குலத்து அரசனுமான மாவீரன் அழகுமுத்து கோன். அவருடைய 269 குருபூஜை விழா பெரம்பலூர் வெங்கடேசபுரம் அம்மன் பேங்கர்ஸ் அருகே மாவட்ட தலைமை செயலகத்தில் காலை 11 மணி அளவில் ஆயர் மக்கள் பேரவை நிறுவனரும், தலைவருமான ந. முத்தையா யாதவ் தலைமையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. ஆகையால், பெரம்பலூர் மாவட்ட ஆயர்குல யாதவ சொந்தங்கள், கோனார் வம்சத்தின் கொள்கை செயல்வீரர்கள், பேரவை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட ஆயர் மக்கள் பேரவை மற்றும் மாவட்ட நிர்வாக குழு அழைப்பு விடுத்துள்ளது.