பெரம்பலூர் அருகே பைக் மீது அமரர் ஊர்தி மோதி 3 பேர் படுகாயமடைந்தனர்.

schedule
2016-01-25 | 13:54h
update
2026-04-22 | 16:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அரும்பாவூர் மேட்டூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(50). இவரது உறவினர் ஒருவர் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக ராமகிருஷ்ணன், தனது அண்ணன் செல்வராஜின் மகன் ராஜேஷ்(17), தேவராஜ் மகன் வினோத் ஆகியோருடன் பெரம்பலூர் சென்றனர். 3 பேரும் பைக்கில் சென்று, பார்த்து விட்டு நேற்றிரவு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

Advertisement

பெரம்பலூர் கோனேரிபாளையம் புற வழிச்சாலை பகு தியில் சென்ற போது, எதிரே வந்த அமரர் ஊர்தி வேன், பைக்குகள் மீது மோதி யது. இதில் பைக்கில் வந்த 3 பேரும் படு கா யமடைந்தனர். அவர்களை அவ்வழியே வந்த காய்கறி வியாபாரிகள் மீட்டு முதலுதவி அளித்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்திற்கு காரணமான அமரர் ஊர்தியை ஓட்டி வந்த கோபாலி டம் விசாரித்து வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2026 - 16:14:46
Privacy-Data & cookie usage: