Perambalur: 3 years imprisonment for Nallarikai Elangovan under Section 420; Rs. 5 thousand fine! Court verdict!
கடலூர் மாவட்டம் ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த வேலன் மகன் முருகேசன் என்பவரிடம் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள நல்லறிக்கை கிராத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் இளங்கோவன் (51). லோன் வாங்கித் தருவதாக கூறி ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக முருகேசன் கொடுத்த புகாரில், கடந்த 2009 ம் ஆண்டு 420 இ.த.ச-கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இளங்கோவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்கு விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இளங்கோவனை குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம் நேற்று இளங்கோவனுக்கு 420-பிரிவின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில், இளங்கோவன் சிறையில் போலீசார் அடைத்தனர்.