பெரம்பலூர்: ஆசிரியர் கொலை வழக்கில் 4 பேர் கைது; போலீசார் மடக்கிப்பிடித்தனர்!

schedule
2026-10-15 | 18:35h
update
2026-10-15 | 18:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 4 arrested in teacher murder case; police apprehend the suspects!

அரியலூர் மாவட்டம் பெரிய திருகோணம் பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி ( 50). இவர், அரியலூர் மாவட்டம் கல்லகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவியர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பெரியம்மாபாளையத்திற்கு செல்லும் சாலையில் உள்ள கோழி பண்ணையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், குன்னத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் மணிகண்டன் (35) ஜெயராமன் மகன் சிவசூரியா (30) மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் ஆகிய மூவரும் புகழேந்தியை கோழி பண்ணையில் விரட்டியதாக கூறப்பட்டது.

அதன் பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் தனிப் படை அமைத்து மணிகண்டன், சிவசூரியா, நவநீதகிருஷ்ணன் ஆகிய மூவரையும் தேடி வந்தனர். குன்னம் போலீசார் கொலை நடந்த சம்பவத்தன்று குன்னம் பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை ஆராய்ந்தனர். மேலும், மூவரது செல்போன் எண்களையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் தீவிர கண்காணிப்பில் இருந்த குன்னம் போலீசார் நேற்று நவநீத கிருஷ்ணன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த செல்போன் எண் செயல்பாட்டிற்கு வந்ததை அறிந்தனர். அதனைத் தொடர்ந்து நவநீதகிருஷ்ணன் செல்போன் எந்த டவரில் செயல்படுகிறது என்பதையும் அறிந்தனர். அதனை தொடர்ந்து குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் ஈரோட்டிற்கு சென்று அங்கு தலைமுறைவாக இருந்த மூவரையும், மற்றும் அடைக்கலம் கொடுத்த நவநீதகிருஷ்ணன் அண்ணனையும் கைது செய்து குன்னத்திற்கு அழைத்து வந்தனர்.

Advertisement

பின்னர், அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் மணிகண்டன் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது: மணிகண்டனின் தந்தை சுந்தரம் தன்னுடைய மகனின் செயல்பாடு பிடிக்காததால் சென்னையில் உள்ள தனது மகள் அருணா வீட்டில் வசித்து வந்தனர். மணிகண்டனின் தந்தை சுந்தரம் சென்னைக்கு செல்லும் பொழுது அவர் வசித்து வந்த வீட்டை அருகில் உள்ள கோழி பண்ணையை பராமரித்து வந்த புகழேந்தியிடம் ஒப்படைத்து சென்றார். புகழேந்தி அந்த வீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தியும் வாட்டர் கேன் வைத்தும் பயன்படுத்தி வந்தார். இந்த செயல் குன்னத்தில் தனியாக வசித்து வந்த மணிகண்டனுக்கு பிடிக்கவில்லை. அதேபோல் புகழேந்தி மேய்த்து வந்த ஆடுகள் மணிகண்டனின் தோட்டத்தில் மேய்ந்ததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மணிகண்டனுக்கும் புகழேந்திக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

மணிகண்டன் சமீபத்தில் பெண் ஒருவரை அழைத்து வந்து புகழேந்தியின் பராமரிப்பில் விடப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்தும் அங்கிருந்த பொருட்களை வீசியும் அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார். இதைப் பார்த்த புகழேந்தி மணிகண்டன் இடம் தகராறு செய்ததுடன் மணிகண்டனின் செயலை சென்னையில் உள்ள சுந்தரத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனால் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன் சம்பவத்தன்று புகழேந்தி மணிகண்டன் வீட்டு வழியாக செல்லும் பொழுது மணிகண்டனை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், மணிகண்டன் தனது நண்பர்களான சிவ சூர்யா, நவநீதகிருஷ்ணன் ஆகிய மூவரும் குடித்துவிட்டு கோழிப்பண்ணையில் இருந்த புகழேந்தியை விரட்டி தலை குப்புற படுக்க வைத்து மணிகண்டன் கத்தியால் விலா எலும்பில் குத்தி கொலை செய்தார். மேலும் மூவரும் ஈரோட்டில், ஹோட்டலில் வேலை செய்து வந்த நவநீதகிருஷ்ணன் அண்ணன் ராஜாவிடம் ( 45) அடைக்கலம் புகுந்தனர். இந்நிலையில் தகவல் அறிந்த குன்னம் போலீசார் ஈரோட்டிற்கு சென்று அவர்களைப் பிடித்து வந்தனர். அதனை தொடர்ந்து மணிகண்டன், சிவசூரியா, நவநீதகிருஷ்ணன் மற்றும் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த ராஜா ஆகிய 4 பேரையும் கைது செய்து குன்னம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.10.2026 - 18:51:42
Privacy-Data & cookie usage: