பெரம்பலூர்: போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 40 ஆண்டு சிறை; ரூ. 2 லட்சம் அபராதம்! நீதிமன்றம் தீர்ப்பு!!

schedule
2025-06-17 | 19:00h
update
2025-06-17 | 19:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 40 years in prison for the accused in the POCSO case; Rs. 2 lakh fine! Court verdict!!

கடந்த 2019 -ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில், குற்றவாளிக்கு 40 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய்.2,00,000 அபராதம் விதித்து தண்டனை வழங்கிய பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக அது ஊரைச்சேர்ந்த வேலுமணி மகன் வேல்முருகன் (31) என்பவர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு Cr.No : 14/19 U/s 5(l), 5 (j) (ii) r/w 6 of POCSO Act போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இவ்வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற விசாரணையில் இருந்த மேற்படி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், வேல்முருகன் குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம் இன்று அவவருக்கு 5(l) பிரிவின் கீழ் 20 வருடம் சிறை தண்டனை மற்றும் 100,000 ரூபாய் அபராதம் 5 (j) (ii) r/w Pocso Act – 20 வருடம் சிறை தண்டனை மற்றும் 100,000 ரூபாய் அபராதம், என மொத்தம் 40 வருடம் சிறை தண்டனை 2,00,000 ரூபாய் அபராதம் எனவும் மேற்படி தண்டனை காலத்தை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார்.

வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த போலீசாரை, எஸ்.பி ஆதர்ஷ் பசேரா பாராட்டினார்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.05.2026 - 21:28:47
Privacy-Data & cookie usage: