பெரம்பலூர்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 454 வழக்குகளுக்கு ரூ.4,8240,526 தீர்வு!

schedule
2025-06-14 | 19:58h
update
2025-06-14 | 19:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 454 cases settled at the National People’s Court for Rs. 4,8240,526!

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியும், முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) பி. இந்திராணி தலைமையில் ஒரு குழுவும், பெரம்பலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கர் தலைமையில் ஒரு குழுவாகவும் மற்றும் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி குற்றவியல் நீதித்துறை நடுவருமான ராஜசேகரன் தலைமையில் ஏற்பாடு செய்யபட்டு அதில் பெரம்பலூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி தன்யா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி தினேஷ். கூடுதல் மகிளா நீதிமன்ற நீதித்துறை நடுவர் தினேஷ் உறுப்பினர்களாக சேர்ந்து, குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரேம்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா ஆகியோர்களை குற்றவியல் வழக்குகளுக்கு நியமனம் செய்யபட்டு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

Advertisement

இதில் பெரம்பலூர். வேப்பந்தட்டை குன்னம் உட்பட அனைந்து நீதிமன்றங்களில் வருவாய்துறை மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி வாரக்கடன் வழக்குகள் உட்பட சுமார் 1200 க்கும் மேற்பட்ட வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் வழக்காடிகள். எதிர் வழக்காடிகள் வரவழைத்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் பேசி 454 வழக்குகள் முடிவுற்றது. மோட்டார் வாகன விபத்து. காசோலை மோசடி வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் உட்பட இழப்பீட்டுத் தொகை ரூ.4,8240,526 உத்தரவிற்கான ஆணை தேசிய மக்கள் நீதிமன்றம் முன்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய (பொறுப்பு) பி.இந்திராணி வழங்கினார்.

தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும். பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும். சார்பு நீதிபதியுமான சரண்யா செய்திருந்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.05.2026 - 07:44:26
Privacy-Data & cookie usage: