பெரம்பலூர்: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் 5 ஜோடிக்கு திருமணம்! கலெக்டர், எம்.எல்.ஏ நடத்தி வைத்து வாழ்த்தினர்!!

schedule
2025-09-14 | 07:47h
update
2025-09-14 | 07:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 5 couples got married at Siruvachur Madhurakaliamman Temple; Collector and MLA conducted the wedding and congratulated them!!

2025 – 2026 ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பு எண். 1 ன் படி பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.50 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி கடந்த 3 ஆண்டுகளில் 1800 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 50 ஜோடிகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 1000 இணைகளுக்கு 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.70 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவால் அறிவிப்பு செய்யப்பட்டது.

Advertisement

திருச்சி மண்டலத்தில் முதற்கட்டமாக சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் 43 ஜோடிகளுக்கு 02/07/2025 அன்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அதன் இரண்டாம் கட்டமாக தொடர்ந்து, 5 ஜோடிக்கு திருமணம் இன்று சுமார் 8 மணி அளவில், சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் திருமண மண்டபத்தில் கலெக்டர் ந.மிருணாளினி, சட்ட மன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் தலைமையில் நடத்தி வைக்கப்பட்டது. திருமண ஜோடிகளுக்கு அரை பவுன் தங்கத் தாலி, ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள திருமண முகூர்த்த மணமக்கள் ஆடைகள், மாலை, பூச்செண்டு, கைக்கடிகாரம், கட்டில், மெத்தை, பீரோ, தலையணை, கோரைப்பாய், மிக்சி, மெட்டி, உள்ளிட்ட அலங்கார மற்றும் அழகு சாதன பொருட்கள், சீர்வரிசை பாத்திரங்கள், திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மணமக்கள் உறவினர்களுக்கான 3 வேளை அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, பெரம்பலூர் உதவி ஆணையர் உமா, திருச்சி உதவி ஆணையர் லட்சுமணன், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை, இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மணமக்கள் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 01:16:27
Privacy-Data & cookie usage: