பெரம்பலூர்: நகைக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற 6 பேர் சிறையில் அடைப்பு!

schedule
2025-11-19 | 14:07h
update
2025-11-19 | 14:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 6 people jailed for trying to rob a jewelry store!

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் பாலாஜி நகை கடையில் இரவு நேரத்தில் நகை கடையின் காவலாளியை தாக்கி கட்டிபோட்டுவிட்டு நகை கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்தாக, நகை கடை உரிமையாளர் கிஸோத் (36) என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisement

பாடாலூர் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை செய்ததில், தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள சோகுப்பத்தை சேர்ந்த வீரமுத்து மகன் கண்ணதாசன் (29), மற்றும் துரைசாமி மகன் முருகன் (29), சுப்பிரமணி மகன் முருகன் (35),

திருவண்ணாமலை மாவட்டம், வேங்கைகால் பகுதியை சேர்ந்த சிவா மகன் ரஞ்சித்குமார் (20), கவுரிசங்கம் மகன் ஸ்ரீராமு (20), கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பரளி கிராமத்தை சேர்ந்த காளியப்பன் மகன் பிரகாஷ் (35) ஆகிய 6 பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதும், விசாரணையில் தாங்கள் தான் நகை கடையில் திருட வந்தாகவும் 6 பேரும் ஒப்புகொண்டதாகவும், அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் 6பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.






Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2026 - 23:50:14
Privacy-Data & cookie usage: