பெரம்பலூர்: போலி புகார் கொடுத்து ஏமாற்றியவருக்கு 6 ஆண்டு சிறை, அபராதம்; நீதிமன்றம் தீர்ப்பு!

schedule
2025-01-30 | 16:06h
update
2025-01-30 | 16:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 6 years in prison and fine for cheating by making a false complaint; court verdict!

பெரம்பலூரில், டிராக்டரை காணவில்லை என்று போலியாக போலீசில் புகார் அளித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஏமாற்றி பணம் பறித்த நபருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதத்தை விதித்து பெரம்பலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கோவிந்தராஜபாளையத்தை சேர்ந்த வெங்கடாஜலம் மகன் சடையன் என்பவர் பெரம்பலூர் மாவட்டம், எசனை கிராமத்தில் தங்கி விவசாய வேலை பார்த்து வந்தார். அப்போது, வீட்டில் நிறுத்தி வைத்திருந்த தனது டிராக்டரை காணவில்லை என்று பெரம்பலூர் போலீசில் புகார் அளித்து அதனடிப்படையில் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ரூ. ஒரு லட்சத்தை இழப்பீடாக பெற்றுக் கொண்டார். 

ஆனால், காணாமல் போனதாக கூறிய டிராக்டரை போலி நம்பரை வைத்து தனது சொந்த ஊரில் உழவு வேலை பார்த்து வந்துள்ளார். இது பின்னர், போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தன் அடிப்படையில், அவரை இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஏமாற்றிய குற்றத்திற்காகவும், மாவட்ட குற்றப்பிரிவில் சடையன் மீது கடந்த 2012 –ம் ஆண்டு 06/2012 U/s 467,468,471,420,@ 420,467,468,120(B) IPC –ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

இன்று 30.01.2025 –ம் தேதி வழக்கினை விசாரித்த பெரம்பலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி, சடையன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இரண்டு குற்றப்பிரிவுகளுக்கு தலா 3 ஆண்டுகள் வீதம் மொத்தம் 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அபராதம் ரூ.5 ஆயிரம் விதித்தும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்டு எதிரிக்கு தண்டனை பெற்றுத் தந்த மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெகன்டர் பெண் தலைமைக் காவலர் ரீத்தல் ஆகியோரை போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா பாராட்டினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.08.2026 - 22:16:46
Privacy-Data & cookie usage: