பெரம்பலூர்: ஐயப்ப பக்தர்களுக்கு 60 நாட்கள் தொடர் அன்னதானம்; அஸ்வின்ஸ் நிறுவனர் கே.ஆர்.வி கணேசன், தனலட்சுமி சீனிவாசன் டிரஸ்ட் இயக்குனர் பூபதி தொடங்கி வைத்தனர்!

schedule
2025-11-17 | 15:34h
update
2025-11-17 | 15:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 60 days of continuous Annadhanam to Ayyappa devotees; Aswins founder KRV Ganesan and Dhanalakshmi Srinivasan Trust director Bhoopathi inaugurated!

பெரம்பலூர் மாவட்டம், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூரை அடுத்த மலையப்ப நகர் பிரிவுபாதையில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 5வது ஆண்டாக தொடர்ந்து கார்த்திகை, மார்கழி என இரு மாதங்கள் நவ.17 தொடங்கி வரும் 2026 ஜனவரி 14ம் தேதி வரை அன்னதானம் வழங்கபடுகிறது. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யப்படும் இந்த சேவை கேரளா செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக செய்யப்படுகிறது. வழியில் பசியுடன் செல்லக்கூடாது நோக்கத்துடன், சற்று இளைப்பாறி செல்லும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்த விழாவை தனலட்சுமி சீனிவாசன் டிரஸ்ட் இயக்குனர் பூபதி கொடியேற்றி தொடங்கி வைத்தார். உற்சவ மூர்த்தியான ஐயப்பனுக்கு அபிஷேகம், பஜனை தீபாராதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்னதானம் கூடத்தை அஸ்வின்ஸ் குழும தலைவர் கே.ஆர்.வி கணேசன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தை சேர்ந்த பூபதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். பெரம்பலூர் எம்.எல்.ஏ ம.பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட பிஜேபி துணைத் தலைவர் ஜெயபாலாஜி தேவவேந்திரன், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் துணை சேர்மன் விவேகானந்தன், அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தை சேர்ந்த மாவட்டத் தலைவர் எஸ்.எம். கண்ணன், மாவட்ட செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன், பொருளாளர் பி.கோவிந்தராஜ், மாவட்ட கவுரவத் தலைவர் சேகர் குருசாமி, மாவட்ட துணை தலைவர்கள் வரதராஜு, ராஜேந்திரன், உதயம் அண்ணாதுரை, கனகவேல், மாவட்ட இணைச் செயலாளர்கள் ராஜா, பாலசுப்பிரமணியன், ரவி, மணிகண்ட பிரபு, மாவட்ட ஆலோசகர் குணசீலன், மாவட்ட அமைப்பாளர் ஆண்டவர் டைல்ஸ் எம்.யோகநாதன், மாவட்ட தொண்டர் படை கேப்டன் ஸ்ரீதர், மாவட்ட தொண்டர் துணை கேப்டன்கள் நாகராஜன் பாக்கியராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் பரிதி (எ) நீலமேகம், மாவட்ட அலுவலக செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சரக பொறுப்பாளர்கள் வட்ட ஆய்வாளர்கள், பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். இந்த அன்னதான முகாமிற்கு ராமராஜ் சகோதரர்கள் இடம் வழங்கி உள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2026 - 09:28:41
Privacy-Data & cookie usage: