பெரம்பலூர்: கோவில் திருவிழாவில் பெண் பக்தர்களிடம் 8 பவுன் தங்க செயின் பறிப்பு!

schedule
2026-06-25 | 14:08h
update
2026-06-25 | 14:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 8-sovereign gold chains snatched from female devotees at temple festival!

பெரம்பலூர் அருகே கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்த 2 பெண் பக்தர்களிடம் 8 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தில் இன்று கம்ப பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் எளம்பலூர், பெரம்பலூர், வடக்குமாதவி, கோனேரிப்பாளையம், தண்ணீர்பந்தல், உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் எம் ஜி ஆர் நகரை சேர்ந்த முத்துசாமி மனைவி செல்வி (55), எளம்பலூரை சேர்ந்த சுசீலா என்ற இரு பெண் பக்தர்களிடம் 8 பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் கூட்டத்தில் நைசாக பறித்து எடுத்து சென்றனர். கூட்டத்தில இருந்து வெளியே பெண்கள் தங்கசங்கிலியை களவாளப்பட்டதை அறிந்து கத்தி கூச்சல் போட்டு, அழுதனர். அங்கிருந்த பெண் போலீசார் அவர்களுக்கு ஆறுதல் கூறினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் டவுன் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 14:12:59
Privacy-Data & cookie usage: