பெரம்பலூர்: மீன் வளர்க்க 90 சதவீத மானியம்; கலெக்டர் தகவல்!

schedule
2025-04-26 | 16:25h
update
2025-04-26 | 16:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 90 percent subsidy for fish farming; Collector informs!

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதிய மீன் வளர்ப்பு குளம் அமைத்தல், புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளம் அமைத்தல், உள்ளீட்டு மானியம் வழங்குதல், பயோபிளாக் முறையில் மீன்வளர்ப்பு, நீரீன் மறுசுழற்சி முறையில் மீன்வளர்ப்பு, அலங்கார மீன்வளர்ப்பு திட்டங்கள் மற்றும் மீன் விற்பனை திட்டங்களான குளிர்காப்பு வாகனம், குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இரு சக்கர வாகனம் வழங்குதல் போன்ற பல திட்டங்கள் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த மீனவ பயனாளிகளுக்கு 90% அரசு மானியத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

Advertisement

இத்திட்டங்களில் பயனடைய விரும்பும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த மீன்வளர்ப்பு விவசாயிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, ஆய்வாளர் அலுவலகம், அறை எண்.174/38A, முதல் தளம், SKC காம்ப்ளக்ஸ் , SKC நகர், புதிய பேருந்து நிலையம் (கிழக்கு), பெரம்பலூர் – 621212. (தொலைபேசி எண். 88389 46011) என்ற முகவரியினை அணுகி விண்ணப்பம் பெற்று விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.06.2026 - 00:38:03
Privacy-Data & cookie usage: