பெரம்பலூர் :+2 தேர்வில் 96.58 சதவீத மாணவர்கள் தேர்ச்சி; மாநில அளவில் 8வது இடத்திற்கு சென்றது!

schedule
2025-05-08 | 17:32h
update
2025-05-08 | 17:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 96.58 percent of students passed the +2 exam; moved to 8th place in the state!

+2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. பெரம்பலூர் மாவட்டத்தில் 96.58 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். 3,713 மாணவர்களும், 3,744 மாணவிகளும் என மொத்தம் 7,457 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர். இதில் 3,547 மாணவர்களும், 3,655 மாணவிகளும் என மொத்தம் 7,202 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 95.53 சதவீதமும், மாணவிகள் 97.62 சதவீதமும் என மொத்தம் பெரம்பலூர் மாவட்டம் 96.58 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இது மாநில அளவில் 8ம் இடத்தை பெற்றது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார், சுயநிதிப்பள்ளிகள் என மொத்தம் 79 மேல்நிலைப்பள்ளிகள் உள்ள நிலையில் மொத்தம் 36 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கை.களத்தூர், ரஞ்சன்குடி, மேலப்புலியூர், ஒகளுர், அனுக்கூர், சிறுவாச்சூர், பெரம்பலூர் (மாதிரி பள்ளி) என மொத்தம் 7 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், நத்தக்காடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியும், எறையூர் நேரு அரசு உதவிபெறும் பள்ளிகள், 27 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகள் என மொத்தம் 36 பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சிபெற்றுளனர்.

இயற்பியலில் 8 நபர்களும், வேதியியலில் 90 நபர்களும், உயிரியலில் 30 நபர்களும், கணிதத்தில் 87 நபர்ளும், வணிகவியலில் 4 நபர்ளும், கணக்கியலில் 04 நபர்களும், கணினி அறிவியலில் 93 நபர்களும், கணினி பயன்பாடுகள் 05 நபர்களும், தமிழில் ஒரு நபரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.06.2026 - 08:12:04
Privacy-Data & cookie usage: