பெரம்பலூர்: நண்பர்களுடன் ஏரியில் விளையாட சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலி!

schedule
2026-05-19 | 09:04h
update
2026-05-19 | 09:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A boy who went to play in the lake with his friends drowned and died!

பெரம்பலூரில் நேற்று மதியம் நண்பர்களுடன் ஏரி தண்ணீரில் விளையாட சென்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.

Advertisement

பெரம்பலூர் துறைமங்கலம் 3 ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெகன். இவரது மகன் டானீஷ் (12). பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். உடன் சென்ற நண்பர்களுக்கு டானீஷ் எங்கு சென்றான் என தெரியாததால் டானீஷின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்த நிலையில் துறைமங்கலம் ஏரியில் டானீஷ் உடல் நேற்று இரவு மிதந்துள்ளது. அதனை பார்த்த உறவினர்கள், உடலை மீட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடம் சென்ற பெரம்பலூர் டவுன் போலீசார் டானிஷ் உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடை விடுமுறையில் தண்ணீரில் விளையாட சென்ற மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.05.2026 - 09:19:59
Privacy-Data & cookie usage: