பெரம்பலூர்: வங்கிகளில் நீண்ட காலமாக உரிமை கோரத டெபாசிட், இன்சூரன்ஸ், ஷேர்கள் ஒப்படைக்கும் முகாம்; கலெக்டர் தகவல்!

schedule
2025-12-16 | 13:20h
update
2025-12-16 | 13:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A camp is being organized to hand over unclaimed deposits, insurance policies, and shares that have been lying dormant in banks for a long time; Collector provides information!

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் 18.12.2025 அன்று காலை 10.30 மணிக்கு நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டுத் தொகைகள் மற்றும் பங்கு தொகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் முகாம் நடைபெற உள்ளது. இந்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் இந்த முகாம் 01.10.2025 முதல் 31.12.2025 வரை அனைத்து வங்கிகள் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் பிற நிதித்துறை கிளைகளிலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

வங்கிக் கணக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருந்தாலோ அல்லது உரிமை கோரப்படாத டெபாசிட் இருந்தாலோ அவை ரிசர்வ் வங்கியின் வைப்புத் தொகையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்படும். பொதுமக்கள் தங்கள் வங்கி வலைத்தளங்கள் அல்லது ரிசர்வ் வங்கியின் UDGAM (https://udgam.rbi.org.in) மூலம் இதை சரி பார்க்கலாம். உரிமையாளர்கள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகள் இந்த தொகைகளை எந்த நேரத்திலும் முறையான ஆவணங்களுடன் வங்கியினை அணுகி ஆதாரங்கள் சமர்பித்து பெற்று கொள்ளலாம்.

வங்கித்துறை, காப்பீட்டுத்துறை மற்றும் நிதி தொடர்பான துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த முகாமில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்குவார்கள். பொதுமக்கள் தங்கள் அடையாள ஆவணங்கள் மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் முகாமில் பங்கேற்று இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்களின் கோரப்படாத நிதி தொகையை மீட்டெடுக்கலாம் என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 13:18:39
Privacy-Data & cookie usage: