பெரம்பலூர்: தேர்தல் அனுமதியின்றி கூட்டம் நடத்திய தே.ஜ.கூ சேர்ந்த 250 பேர் மீதும், மண்டப உரிமையாளர் மீதும் வழக்குப் பதிவு!

schedule
2024-03-31 | 04:46h
update
2024-03-31 | 04:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A case has been registered against 250 members of TJK and the owner of the hall who held a meeting without election permission!

Advertisement

பெரம்பலூரில் தேர்தல் விதிமுறையை மீறி முன் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 250 பேர் மீதும் மற்றும் தனியார் திருமண மண்டப உரிமையாளர் மீதும் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளநிலையில் முன் அனுமதி எதுவும் பெறாமல் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள்.. துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கூட்டம் நடத்தியதாக பெரம்பலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சுகுணா கொடுத்த புகாரின் பேரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த 250 நபர்கள் மீதும் மற்றும் கூட்டம் நடத்த இடம் கொடுத்த தனியார் திருமண மண்டப உரிமையாளர் தமிழரசன் மீதும் பெரம்பலூர் போலீசார் IPC-188 வது சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 13:46:47
Privacy-Data & cookie usage: