பெரம்பலூர்: ,திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு எறையூர் அருகே போலீசார் வேன் ஒன்றில் மதுரை சரக டாப் ரவுடி காளி என்கிற வெள்ளை காளி என்பவனை சென்னை புழல் சிறையில் அடைப்பதற்காக போலீஸ் பாதுகாப்பில் வேனில் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். எறையூர் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது, 2 கார்களில் வந்த 15 பேர் கொண்ட கும்பல், நாட்டு வெடிகுண்டை வீசி கொல்ல முயன்றது.
நாட்டு குண்டு வெடித்ததில், மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த மருதபாண்டி, திருநெல்வேலி புளியங்குடியை சேர்ந்த விக்னேஸ்குமார், சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய மூன்று போலீசாரும் தீக்காயமடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நாட்டு வெடிகுண்டு வீசிய கும்பலை அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சி உதவியுடன் போலீசார் அடையாளம் காண தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.