பெரம்பலூர்: பார்சல் கொடுக்க சென்ற ஆளும் கட்சி செய்தியாளரின் காரை மறித்து பஸ்சை நிறுத்தி அடாவடியில் ஈடுபட்ட அரசு பஸ் டிரைவர்!

schedule
2025-04-29 | 20:10h
update
2025-04-29 | 20:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A government bus driver engaged in a brawl by blocking the car of a ruling party journalist who was on his way to deliver a parcel and stopping the bus!

முரசொலி மற்றும் கலைஞர் டிவியின் பெரம்பலூர் மாவட்ட செய்தியாளராக இருப்பவர் செந்தில்முருகன். இவர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆத்தூருக்கு பார்சல் ஒன்றை பஸ்சில் கொடுக்க அவரது காரில் சென்று உள்ளார். அப்போது. பெரம்பலூர் டெப்போவை சேர்ந்த ஆத்தூர் செல்லும் அரசு பேருந்து அங்கு வந்துள்ளது . அப்போது வந்த கண்டக்டர் காரை ஒதுக்கும்படி கூறியுள்ளார். உடனடியாக சற்று நேரத்தில் எடுத்து விடுவதாகவும், ஒரு நிமிடம் அவகாசம் கொடுக்கும் படி பேசிக் கொண்டிருக்கும் போதே, பஸ் டிரைவர் ஏர் ஹாரன் அடித்து தொடர்ந்து விடாமல் பலத்த ஒலி எழுப்பு உள்ளார். அப்போது செய்தியாளர் சற்று நேரம் பொறுங்கள் காரை நகர்த்துகிறேன் என சைகையில் தெரிவித்த போது , பஸ் டிரைவர் செய்தியாளரின் காரை மறித்து பஸ்சை நிறுத்தி விட்டு சென்றுவிட்டார். காரை எடுக்க வேண்டும் பஸ்சை நகர்த்த தெரிவித்த போது, தெடாவூரை சேர்ந்த கனகராஜ் தகாத வார்த்தைளால் திட்டி செய்தியாளரிடம் வம்பிழுத்துள்ளார். இது, குறித்து செய்தியாளர் போனில் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அங்கு போக்குவரத்து ஊழியர்கள் வந்த பிறகே பேருந்தை ஓரம் கட்டி உள்ளார்.

Advertisement

மேலும், டிரைவர் தெடாவூர் கனகராஜ் அரசு பஸ்சில் பணிபுரிவதால், வழித் தடத்தில் முறையாகபயணிகளை இறக்கி ஏற்றும் போது வசைபாடுவதும், பயணிகளை உரிய பஸ் ஸ்டாப்பில் இறக்கி விடாமல், அருகில் உள்ள பஸ் இறக்கி விடுவதும், பயணிகள் மற்றும் பெரம்பலூர் டெப்போவில் பணிபுரியும் சக ஊழியர்களிடமும், தராதமின்றி பேசுவதும் தெரிய வந்துள்ளது. செல்போன் பேசிய படியே ஓட்டுவதும், சில நேரங்களில் குட்கா போன்ற போதை பாக்கு போட்டு துப்பிக் கொண்டே ஓட்டுவதும், பஸ்சுக்குள்ளேயே சிகரெட் பிடிப்பதும், எதிர் வரும் வாகனங்களை மதிக்காமல் முந்தி செல்வது, சமிக்கைகளை காட்டாமல் பஸ்சை ஓட்டுவது என பல்வேறு விரும்ப தகாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளர்.

டெப்போ அதிகாரிகளே டிரைவர் கனராஜை கண்டால் மிரளுவதும் தெரிய வந்துள்ளர். இது போன்ற ஆசாமிகள் அரசு ஊழியராக பணிபுரிவதால் எந்த தவறு செய்தாலும், தட்டிக் கேட்பவர்களை அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து என போலீசில் பொய் புகார் கொடுத்து விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளது… தெரியவந்துள்ளது. இவரை போன்ற அடாவடி பேர்வழிகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், உரிய புத்தாக்க பயிற்சியும் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

செய்தியாளர் செந்தில் முருகன் இது குறித்து பெரம்பலூர் போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 07:07:32
Privacy-Data & cookie usage: