பெரம்பலூர்: வேர்களைத் தேடி பயணம்; விசிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் காரியனூரில் நடந்தது.

schedule
2026-09-21 | 09:40h
update
2026-09-21 | 09:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A ‘Journey in Search of VCK’s Roots’ was held in Karianur, led by District Secretary Krishnakumar.

பெரம்பலூர் மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேர்களைத் தேடி பயணம் என்ற மக்களைத் தேடி நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் தொடர்ந்த நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட காரியானூர் மற்றும் ஜெயந்தி காலனி பகுதியில் நடந்த வேர்களைத் தேடி பயணம் நிகழ்ச்சியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கைகள், அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மேற்கொண்டுள்ள சமூக உரிமைப் போராட்டங்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

Advertisement

மேலும், அந்தந்த பகுதிகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் மற்றும் சமூகச் சூழ்நிலைகளை எவ்வாறு அணுகுவது, உரிமைகளுக்காக எவ்வாறு குரல் கொடுப்பது என்பது குறித்தும் நிர்வாகிகள் விளக்கமளித்தனர். ஒன்றிய துணைச் செயலாளர் வடிவேல்,வரவேற்றார். மாநிலச் செயலாளர் வீர. செங்கோலன், மண்டல துணைச் செயலாளர் மன்னன் மன்னன், மாவட்டப் பொருளாளர் பிச்சைப்பிள்ளை ஆகியோர் கருத்துரையாற்றினர்.

வடக்கு ஒன்றியச் செயலாளர் வடிவேல், பழனிமுத்து, மாவட்டத் துணைச் செயலாளர் இடிமுழக்கம் முன்னிலை வகித்தனர். மேலும், அன்புராஜ், சண்முகம், முத்துச்செல்வம், தமிழ்வாணன், பாலசுப்ரமணியன், அஜித்குமார், சோலைநகர் ராமர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.09.2026 - 09:58:50
Privacy-Data & cookie usage: