பெரம்பலூர்: வேப்பந்தட்டையில் விசிக-வின் வேர்களைத் தேடி பயணம்; மாவட்ட செயலளார் ந.கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது!

schedule
2026-01-08 | 19:04h
update
2026-01-08 | 19:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A journey to Verkalai Thedi (trace the roots) of the VCK in Veppanthattai; conducted under the leadership of District Secretary N. Krishnakumar!

பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேர்களைத் தேடி என்ற கட்சியை வலுப்படுத்தும் நிகழ்ச்சி அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ந.கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது. பலவீனமாக உள்ள பகுதிகளில் முகாம் மறுசீரமைத்து கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாகவும், கட்சியை விட்டு ஒதுக்கி இருப்பவர்களை ஒருங்கிணைத்து இயக்கத்தை நடத்துவதும், ஓய்வு பெற்றவர்களிடம் வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ளவும், கூட்டம் நடத்தி அறிக்கை அளிக்க தலைமை உத்திரவிட்டுள்ளதாக தெரிவித்த அவர் பொதுமக்களிடம் பேசியதாவது:

தம்பிகள் வேண்டுகோளின் படி வேப்பந்தட்டை தேர்வு செய்யப்பட்டது. நான் மாவட்ட செயலாளராக பதவி ஏற்றவுடன் முதலில் வரும் உங்கள் ஊர் வேப்பந்தட்டைதான். எனவே, பொதுமக்களாகிய உங்களுக்கு உங்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்காது, பாதுபாப்பு அளிக்கும். சமூக அந்தஸ்து, சமத்துவம், சம உரிமையை பெற்றுக் கொடுக்கும். எனவே, நல்ல ஒத்துழைப்பு கொடுங்கள் என்றும், அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். எந்த பிரச்சனையை நீங்களே உருவாக்காதீர்கள், தேடிப் போகதீர்கள்.

Advertisement

கிளை செயலாளர்கள் நீங்க ஒத்துழைச்சா இவரு ஒன்றியச் செயலாளர், இவரு ஒத்துழைச்சா நான் மாவட்டச் செயலாளர். இல்லன்னா நானே சொல்லிட்டு இருக்க வேண்டியதுதான். நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது, நான் யாருன்னு உங்களுக்குத் தெரியாது. நீங்க சிறப்பா செயல்படணும். மாசத்துல ஒரு கூட்டமாவது ‘முகாம் கூட்டம்’ போட்டு, பேசுவதுடன் இருக்கிற பிரச்சனைகளை தீர்மானம், அறிக்கையாக கொடுங்கள். வேப்பந்தட்டை பழைய படி விசிக பலம் பெற வேண்டும் என்றும், அடுத்த கட்டமாக கட்சி இளையதலைமுறைக்கு வழிவிட உள்ளது. பெரியார், அம்பேத்கர், கார்மாக்ஸ் ஆகிய மூன்று முகங்களை கொண்டவராக தலைவர் தொல்.திருமாளவன் உள்ளார். தலைவருக்கு யாரும் கிடையாது. நாம் தலைவருக்கு என்பதை உணர்ந்து செயல்படுங்கள் என பேசினார்.

கூட்டத்தில், வேப்பந்தட்டை முகாம் செயலாராக ஆனந்தன், பொருளாளர் கவிக்குமார், துணைச் செயலாளர்கள் விஜய், மற்றும் லட்சுமி, சின்னத்துரை, மகளிர் விடுதலை இயக்கத் தலைவியாக தமிழ்கொடி, பொருளாளர் செவ்வந்தி, துணைச் செயலாளர்கள் அகிலா, நித்யா, இளம்சிறுத்தை எழுச்சி பாசறை முகாம் செயலாளர் தமிழரசன், பொருளாளர் மணிமாறன், துணைச் செயலாளர் சாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

முன்னதாக, கிளை பொருளாளர் கவிகுமார் வரவேற்றார், மேற்கு ஒன்றிய செயலாளர் எ. வெற்றியழகன், ஒன்றிய பொருளாளர் பிச்சைபிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய அணி மாநில செயலாளர் வீர. செங்கோலன். பாராளுமன்ற தொகுதி துணை செயலாளர் மன்னர் மன்னன் மாநில மகளிர் விடுதலை இயக்க துணை செயலாளர் செல்வாம்பாள். மாவட்ட செய்தி தொடர்ப்பாளர் அழகுமுத்து, மகளிர் விடுதலை இயக்கம் மாவட்ட செயலாளர் ரேணுகா, கிழக்கு ஒன்றிய செயலாளர் இடிமுழக்கம், மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் அய்யம் பெருமாள் ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஏராளமான பெண்கள் உள்பட பலர் திராளாக கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 12:48:09
Privacy-Data & cookie usage: