பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோள ஆராய்ச்சி மையம், எத்தனால் தயாரிப்பு தொழிற்சாலை  கொண்டு வரப்படும்;  திமுக வேட்பாளர் ஜெயலட்சுமி பிரச்சாரத்தில் தேர்தல் வாக்குறுதி!

schedule
2026-04-10 | 21:39h
update
2026-04-10 | 21:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A maize research center and an ethanol production plant will be established in the district—DMK candidate Jayalakshmi’s election promise made during her campaign.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் மதசார்பற்ற கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்தார். காலையில் வேப்பந்தட்டை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை தொடங்கிய அவருக்கு, திமுக மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் சிறப்பான வரவேற்பு விண்ணில் வேட்டுகள் முழங்க கொடுக்கப்பட்டது. பின்னர், ஜெயலட்சுமிக்கு வேப்பந்தட்டை பேருந்து நிலையத்தில் பூக்கள் தூவி வரவேற்ற பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வாழ்த்தினர். அப்போது, வேட்பாளர் ஜெயலட்சுமி பேசியதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் அண்ணன் ஆ.ராசாவின் முயற்சியால் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டு சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. பருத்தி ஆராய்ச்சி நிலையம் திமுக ஆட்சயில் கொண்டு வரப்பட்ட ஒன்று. அதே போல, பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. அதற்கு உரிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், அது குறித்து ஆலாசனைகள் பெறவும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் ஆராய்ச்சி மையம், எத்தனால் தயாரிப்பு தொழிற்சாலை  கொண்டு வரப்பட்டு விவசாயிகளின் மக்காச்சோளத்திற்கு உரிய  குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பதுடன், அவர்கள் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுப்பேன் என அவர் வாக்குறுதி அளித்தார். மேலும், திமுக ஆட்சியின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துரைத்து வாக்குகள் சேகரித்தார்

Advertisement

பின்னர், வேப்பந்தட்டை, பாலையூர், தொண்டப்பாடி, நெய்குப்பை, என்.புதூர், சாத்தனவாடி, மேட்டுப்பாளையம், அழகாபுரி, சிறுவயலூர், அனுக்கூர், அ.குடிக்காடு, VRSS வி.ஆர்.எஸ்.எஸ்.புரம், பிரம்மதேசம், எம்.ஜி.ஆர். நகர் , வல்லாபுரம், வாலிகண்டபுரம், தம்பை, தேவையூர், மேல தைக்கால், காந்தி நகர், ரஞ்சன் குடி, மங்கள மேடு, சின்னாறு, சர்க்கரை ஆலை, எறையூர், அயன்பேரையூர், தைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் இரவு வரை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் இரா.பரமேஸ்குமார், ஒன்றிய செயலாளரகள் நல்லத்தம்பி, ஜெகதீஸ்வரன், மாவட்ட துணை செயலாளர் டி.சி. பாஸ்கர், தொண்டரணி ரமேஷ், திமுக பொதுக்னகுழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், எசனை என்.எம்.ஜி, பாலையூர் மணிவண்ணன், திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி, நகராட்சி துணைத் தலைவர் ஆதவன், கவுன்சிலர் ஜெயப்பிரியா, தலைமைக் கழக பேச்சாளர் எசனை ஆறுமுகம், அம்பேத்கர், விசிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணியை சேர்ந்த விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், மக்கள் விடுதலை கட்சி, ஆதிதமிழர் பேரவை, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனித நேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிடட கட்சிகளை மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2026 - 10:11:35
Privacy-Data & cookie usage: