பெரம்பலூர் : தனிமையில் இருந்த காதலர்களிடம் கத்தியை காட்டி நகை, செல்போன் பறித்து சென்ற ஒருவர் கைது; மற்றொருவர் தப்பி ஓட்டம்!!

schedule
2024-02-05 | 17:10h
update
2024-02-05 | 17:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A man was arrested for stealing jewelery and mobile phone from a romantic couple with a knife; Another escaped!!

பெரம்பலூர் மாவட்டம், மங்கூன் – சிறுவயலூர் சாலையில் நேற்றிரவு 8.30 மணி அளவில் ஒரு ஜோடி ஒன்று காதல் செய்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக கே.டி.எம் பைக்கில் வந்த வாலிபர்கள், கள்ளக்காதல் ஜோடி என்பதை தெரிந்து கொண்டு, அவர்களிம் இருந்த செல்போன் ஒன்றும், 1 பவுன் தங்க செயின் மற்றும் கள்ளக்காதலன் அணிந்திருந்த வெள்ளி செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அதிவேகமாக பைக்கில் தப்பினார்கள்.

அதிவேகமாக சென்ற கொள்ளையர்கள் வளையில் திரும்ப முடியாமல் வாய்க்காலில் பைக்குடன் விழுந்தனர். அருகே அமர்ந்திருந்த அப்பகுதி பொதுமக்கள் இதைக் கண்டதும், திருடன் என தெரியாமல் காப்பற்றி முதலுதவி செய்தனர். இந்நிலையில் செயினை பறிகொடுத்த கள்ளக்காதல் ஜோடியும் அங்கு வந்து பொதுமக்களிடம் அவர்கள் திருடர்கள் தங்களது நகையை பறித்துக் கொண்டு வந்ததை தெரிவித்தனர். இதை கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

Advertisement

இது குறித்து பாடாலூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதல் ஜோடி பெரம்பலுர் அருகே உள்ள சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. அதில் ஒருவர்

பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் அருகே உள்ள தைக்கால் கிராமத்தை சேர்ந்த அன்வர்பாஷா (31) என்பதும், திருமணமானவர் என்பதும், ஒரு குழந்தை உள்ளதும், அங்கு டிரைவராக வேலை பார்த்ததும் தெரியவந்தது. மேலும் இவருடன் வந்தது மயிலாடுதுறையை சேர்ந்த பிரியதர்ஷினி (25), (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பதும் தெரிய வந்தது. திருமணமாக இவர் அதே கல்லூரி மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், டி.எஸ்.பி பழனிசாமி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்புலட்சுமி பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு போலீசார் கொடுத்த தகவலின் பேரில் தனது பைக் காணவில்லை வாலிபர் ஒருவர் திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காயங்களுடன் இருந்ததால், போலீசார் அவரைப்பிடித்து வந்து நடத்திய விசாரணையில், வாலிபர் தான் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

மேலும், வாலிபரிடம் நடத்திய விசாரணையில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை சேர்ந்த ரெங்கராஜ் மகன் சந்தோஷ்குமார் (26) என்பதும், மற்றொருவன் திருச்சி – திருவாணைக்காவலை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் அர்ஜுன் (24) என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கத்தி, வீச்சு அருவாள், மற்றும் கள்ளக்காதல் ஜோடியிடம் பறித்து செல்லப்பட்ட செல்போன், செயின்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், 2 பேர் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி உள்ளனர். கடந்த ஆண்டு டாக்டர் யாழினி என்பவரிடம் 7 பவுன் தங்க செயினை பறித்து சென்றதையும் பறிமுதல் செய்தனர். கொள்ளையன் சந்தோஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு கொள்ளையன் அர்ஜுனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சம்பவம் நடத்த 24 நேரத்திற்குள் நடடிவக்கை எடுத்த போலீசாரை பாராட்டி போலீஸ் எஸ்.பி ஷ்யமளாதேவி ரீவார்டு வழங்க உத்தவிரவிட்டதன் பேரில் டி.எஸ்.பி பழனிசாமி தனிப்படை போலீசாரிடம் வழங்கி பாராட்டினார்.

பெரம்பலூர் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பல்கலைக் கழக மருத்துவக்கல்லூரியில் பல கள்ளக்காதல் ஜோடிகள் அறைகளில் ஒன்றாக இருப்பதையும், பல நேரங்களில் முக்கோண கள்ளக்காதலால் கள்ளக்காதலர்கள் தகராறில் ஈடுபட்டதையும் அறிந்த நிர்வாகம் பலரை வேலையை விட்டு நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 18:44:42
Privacy-Data & cookie usage: