பெரம்பலூர்: வயலில் சருகுகளுக்கு தீ வைத்தவர் தீயில் சிக்கி பரிதாப பலி!

schedule
2025-02-16 | 14:02h
update
2025-02-16 | 14:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A man who set fire to straw in a field died tragically in the fire!

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு அருகே உள்ள ஒகளூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேலு மகன் பரமசிவம்.
75 வயது முதியவரான இவர் தனக்கு சொந்த வயலில் மக்காச்சோளம் பயிரிட்டு அறுவடை செய்திருந்தார். வயலில் மீதமாக கிடந்த சருகுகளை தீட்டு கொளுத்தி கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக 4 பக்கமும் தீ சூழ்ந்ததால் மூச்சு திணறி, தீயில் கருகி முதியவர் பரமசிவம் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

Advertisement

வயலை தூய்மைப்படுத்தி சுத்தம் செய்து விட்டு வருவதாக கூறி நேற்று காலை வீட்டை விட்டு சென்ற முதியவர் பரமசிவம் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தார் இன்று வயல் பகுதிக்கு சென்று பார்த்த போது தீயில் கருகி பரமசிவம் உயிரிழந்த சம்பவம் தெரிய வந்திருக்கிறது.

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மங்களமேடு போலீசார், முதியவர் பரமசிவத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயலை தூய்மைப்படுத்த பற்ற வைத்த தீயில் கருகி முதியவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தார் உள்ளிட்ட உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.06.2026 - 19:12:25
Privacy-Data & cookie usage: