பெரம்பலூர்: குளத்தில் மீன் பிடிக்க சென்றவர் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி பலி!

schedule
2025-04-27 | 11:44h
update
2025-04-27 | 11:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A man who went fishing in a pond drowned after getting stuck in the mud!

பெரம்பலூர் மதனகோபாலபுரம், ரோவர் ஆர்ச் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் மோகன் (60), இவர் பெரம்பலூர் சங்கு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள தெப்பக்குளத்தில் மீன் பிடிக்க சென்றார். அங்கு சென்றவர் சேற்றில் சிக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் அங்கிருந்து மீண்டு கரைக்கு வராததால், அவரது உறவினர்கள் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தன் பேரில், சம்பவ சென்ற தீயணைப்பு வீரர்கள் குளத்தில் குதித்து தண்ணீருக்குள் தேடினர். தேடுதலுக்கு பின்னர் மோகனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு சேர்த்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் டவுன் போலீசார், உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

Advertisement

இறந்து போன மோகனின் மனைவி லதா (54), செட்டிக்குளம் அருகே உள்ள பழைய விராலிப்பட்டி கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 10:40:44
Privacy-Data & cookie usage: