பெரம்பலூர்: ஓடிக்கொண்டிருந்த கார் நடுரோட்டில் தீப்பிடித்தது; அதிர்ஷ்டவசமாக குழந்தை உட்பட 5 பேர் உயிர் தப்பினர்!

schedule
2026-06-16 | 07:15h
update
2026-06-16 | 07:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A moving car caught fire in the middle of the road; fortunately, five people, including a child, escaped unharmed.

திருச்சி கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன் மகன் சுதர்சன் (51). இன்று அதிகாலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி காரில் அவரது குழந்தை உள்பட 5 பேர் புறப்பட்டனர். திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே ஆலத்தூர் கேட் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக காரின் முன் பக்கத்தில் புகை வந்தது. இதில் உஷாரான அவர்கள் உடனடியாக காரை ஓரமாக நிறுத்தினர். அதற்குள் காரில் வேகமாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தை உள்பட 5 பேரும் சுதாரித்துக் கொண்டு காரை விட்டு வெளியே வந்தனர். அடுத்த சில வினாடிகளில் காரில் திடீரென தீ பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த 5 பேரும் காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்தத பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் விபத்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனாலும், அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த தீவிபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 07:41:15
Privacy-Data & cookie usage: