பெரம்பலூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சாலையை கடக்க முயன்றவர் பலி!

schedule
2024-11-05 | 17:54h
update
2024-11-05 | 17:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A person trying to cross the road was killed when an unidentified vehicle collided with it!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் நெய் குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் தர்மராஜ் (37). இவர் பெரம்பலூரில் உள்ள எக்விடாஸ் பைனான்ஸில் கலெக்சன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இன்று இரவு 8 மணி அளவில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜியோ பெட்ரோல் பங்க் எதிரே, பைக்கை நிறுத்தி விட்டு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வருவதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார், இறந்த தர்மராஜன் சடலத்தை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வளர்ப்பது செய்த போலீசார் மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 00:36:58
Privacy-Data & cookie usage: