பெரம்பலூர்: திமுக வேட்பாளர் டாக்டர் ஜெயலட்சுமியை ஆதரித்து ஆ.ராசா எம்.பி., 2 நாட்கள் வாக்கு சேகரிக்கிறார்!

schedule
2026-04-12 | 15:51h
update
2026-04-12 | 18:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A.Raja M.P., embarks on 2 day Whirlwind campaign tour to seek Votes in Suppportof DMK Candidate Dr. Jayalakshmi

Advertisement

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெயலட்சுமியை ஆதரித்து, திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ. ராசா 2 நாட்கள் சூறாவளி சுற்றுப்பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

நாளை ஏப்.13- மாலை 5.00 மணி அளவில், பூலாம்பாடி கிழக்கு மந்தை வெளி பகுதியிலும், மாலை 6.00 மணி அளவில், அரும்பாவூர் பாலக்கரை பகுதியிலும, இரவு 7.00 மணி அளவில், எசனை கடைவீதி தேரடி திடல் பகுதியிலும், இரவு 8.00 மணி அளவில் பெரம்பலூர் நகரம் காந்தி சிலை அருகிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளுடன் வாக்குகளை சேகரிக்கிறார்.

இதேபோல நாளை மறுநாள் ஏப்.14 அன்று மாலை 4 மணி அளவில் லாடபுரம் பெருமாள் கோவில் பகுதியிலும், மாலை 5.00 மணி அளவில் குரும்பலூர்அண்ணா சிலைஅருகிலும், மாலை 6.00 மணி அளவில், செட்டிகுளம் கடைவீதியிலும், மாலை 7.00 மணி பாடாலூர் ஊட்டத்தூர் பிரிவு சாலையிலும், மாலை 8.00 மணி அளவில், வ.களத்தூர் தேரடி திடல் அருகிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2026 - 13:42:01
Privacy-Data & cookie usage: