பெரம்பலூர்: முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைப்பார்; திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்பி பேட்டி!

schedule
2026-04-23 | 06:44h
update
2026-04-23 | 06:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A. Raja MP cast his vote in his hometown, Velur.

திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பியுமாக ஆ.ராசா தனது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் வேலூரில் உள்ள அரசு பள்ளியில் வாக்கு செலுத்தினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைப்பார் ஆ.ராசா பேட்டி!

“நடந்து வருகின்ற திராவிட மாடல் ஆட்சிக்கு, அந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு, ஆட்சியினுடைய தலைவர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுடைய அரசியல் முதிர்ச்சிக்கும் ஆளுமைக்கும் அங்கீகாரம் அளிக்கின்ற வகையிலும், அவருடைய வளர்ச்சித் திட்டங்களைப் பாராட்டுகின்ற விதத்திலும், இவற்றையெல்லாம் தாண்டி தமிழ்நாட்டிற்குள் பாசிசம் வராமல் தடுக்க இந்த ஆட்சியால், இவரால் மட்டுமே முடியும் என்கின்ற நம்பிக்கையோடும் இன்றைக்கு தமிழகத்தில் இருக்கின்ற பெருவாரியான மக்கள் மதச்சார்பற்ற இந்தக் கூட்டணிக்கு, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்னுடைய சொந்த ஊரான இந்த கிராமத்திலேயும் அந்த எழுச்சியை என்னால் பார்க்க முடிகிறது. பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதி மட்டுமல்ல, 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தமிழ்நாட்டில் வென்று மீண்டும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மறுபடியும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்.”

கேள்வி: (பத்திரிகையாளர்): “பொதுவா பாஜக தலைவர்களும், பாஜக அமைச்சர்களும் தமிழகத்தை நோக்கி பிரச்சாரத்திற்கு இந்த முறை அதிக அளவில் வந்திருக்காங்க. பிரதமர் நரேந்திர மோடியும் வந்திருக்கார். இதை எப்படி பார்க்குறீங்க?”

பதில்: “இது வந்து ரொம்ப… அதாவது ஒரு கிளியர் மெசேஜ் (Clear Message) போகணும். ஏன்னா அவங்க வராம இருந்திருந்தா, ‘நாங்க வந்தா தமிழ்நாட்டை மாத்திருப்போம்’னு சொல்லுவாங்க. நீங்க எல்லா முதலமைச்சர்களும், அமைச்சர்களும்… நீலகிரிலாம் பார்த்தீங்கன்னா நிறைய வெளிமாநிலத்தினுடைய தலைவர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், பிஜேபி-யைச் சார்ந்தவர்கள் எல்லாம் வந்து டெண்ட் (Tent) அடிச்சிருக்காங்க.

அதனால ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கின்ற பாசிச சக்திகளும், பாஜக தலைவர்களும் இங்கே வந்து கூடாரமிட்டு, கொட்டமடித்ததிற்குப் பிறகும் தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடித்தார்கள் என்ற செய்தியைப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இதை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதுகிறோம். என தெரிவித்தார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2026 - 06:52:25
Privacy-Data & cookie usage: