Perambalur: A resolution was passed at a VCK meeting demanding the cancellation of licenses for stone quarries in the district that are violating regulations.
விசிக வேப்பந்தட்டை வடக்கு மற்றும் கிழக்கு ஒன்றியத்தின் ஒன்றிய செயற்குழு கூட்டம் வண்ணாரம் பூண்டி தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய செயலாளர் வடிவேல் பழனி முத்து தலைமையில் நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் க.ராதாகிருஷ்ணன் வரவேற்றார்,
மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட பொருளாளர் பிச்சைப்பிள்ளை, மாவட்ட துணை செயலாளர்கள் இடிமுழக்கம் வெற்றியழகன், தங்க சண்முகசுந்தரம், சங்கீதா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தழுதாழை பாலு இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் அய்யம்பெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், வரும் ஆகஸ்ட் 17 தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு வேப்பந்தட்டை கிழக்கு வடக்கு ஒன்றியங்களில் சார்பில் சுமார் நூறு வாகனங்களில் கலந்து கொள்வதெனவும், வி களத்தூர் பகுதியில் நிரந்தரமாக பேருந்து நிலையம் அமைக்கவும் மற்றும் சுகாதார வளாகம் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டுமெனவும்,
வி களத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தரமாக 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் எனவும், .
திருவாளந்துறை பொது மயான பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை அமைக்க வேண்டுமெனவும், காரியனூரில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பெரிய ஏரியை மாவட்ட நிர்வாகம் தூர்வாரி தருமாறும், பின்தங்கிய வேப்பந்தட்டை வட்ட கிராம பகுதிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ கல்வி நிறுவனங்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும்,
விசிகட்சியின் பெரம்பலூர் 4 ரோடு பகுதியைச் சேர்ந்த மாநில துணை செயலாளர் வணிக அணி நடராஜன் கட்சியின் கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும் எதிராகவும் கட்சி நற்பெயருக்கு ஊருக்கு விளைவிக்கும் வகையில் செயல்பட்டும், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள பஞ்சமே நிலங்களை மீட்டெடுத்து அவற்றை நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்,
பெரம்பலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி கற்களை உடைத்து வரும் கல்குவாரிகளை கண்டறிந்து உரிமங்களை ரத்து செய்துடன், மீண்டும் அவர்களை ஏலம் எடுக்க அனுமதி வழங்கக் கூடாது எனவும்,
36 எறையூரில் சாதிய மத பாகுபாட்டோடு செயல்பட்டு வரும் நேரு கல்வி நிலையத்தை அரசை ஏற்று நடத்த வேண்டும் எனவும், எறையூர் காமராசர் நகர் நரிக்குறவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் விசிக புதிய கிளை அமைக்கவும், பசும்பலூர் கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் நூலகம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நிலம் ஒதுக்கி வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மண்டல செயலாளர் ஸ்டாலின், மாநிலச் செயலாளர் வீரசெங்கோலன், மண்டல துணைச் செயலாளர் மன்னர் மன்னன், மாநில துணைச் செயலாளர் (மு.மா.க) அம்பேத்கோகுல், மாநில துணைச் செயலாளர்கள் எஸ் பி வெங்கடேசன், 4 ரோடு நடராஜன், ஆதிராஜா ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட துணை அமைப்பாளர்கள் மற்றும் வேப்பந்தட்டை கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர். அசேன் முகமது நன்றி கூறினார்.