பெரம்பலூர்: சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் வழங்க கோரி மின்வாரிய கேங்மேன் கூட்டத்தில் தீர்மானம்!

schedule
2026-01-30 | 14:58h
update
2026-01-30 | 14:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A resolution was passed at the electricity board gangmen’s meeting demanding transfers to their native districts!

Advertisement

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பெரம்பலூர் வட்டக் கிளை சார்பாக கேங் மேன் ஊழியர்களின் சிறப்பு கூட்டம் மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் கேங் மேன் பணியாளர்களை கள உதவியாளராக மாற்றம் செய்திட வேண்டும், சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும், ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் ஆப்லைன் பணி மட்டும் மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. மாநில தலைவர் கண்ணன், மாநில பொதுசெயலாளர் டி.ஜெய்சங்கர், பொருளாளர் வெங்கடேசன், பொறியாளர் அமைப்பு பொதுச் செயலாளர் அருள் செல்வன் சிறப்புரை ஆற்றினார். வட்ட செயலாளர் இளங்கோவன். வட்ட துணை செயலாளர் பன்னீர்செல்வம், நல்லுசாமி, அஸ்வின், தினேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.01.2026 - 15:26:36
Privacy-Data & cookie usage: