Perambalur: A resolution was passed at the VCK meeting demanding new bus facilities for Brahmadesam!
பெரம்பலூர் மாவட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் விசிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் வேர்களைத் (மக்களை) தேடி நிகழ்ச்சி நடைபெற்றது. மகளிர் விடுதலை இயக்கத்தின் கிளைச் செயலாளர் ராஜலெட்சுமி, கிளை பொருளாளர் மாரியாயி, துணை கிளைச் செயலாளர்கள் புஷ்பராணி, திவ்யா மற்றும் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை முகாம் செயலாளர் பூங்கொடி, பொருளாளர் பழனியம்மாள், துணை செயலாளர்கள் மீனா, கோமதி ஆகியோர் புதிதாக பொறுப்பேற்று கொண்டனர். வேப்பந்தட்டை ஒன்றிய துணை செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். மண்டல செயலாளர் ஸ்டாலின் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பெரம்பலூர் இருந்து பிரம்மதேசத்திற்கு எம்ஜிஆர் நகர், வல்லாபுரம் வழியாக புதிய அரசு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். முறையாக குடிநீர், பகுதிநேர ரேசன் கடை ஏற்படுத்தி தர வேண்டும். இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விசி கட்சி பிரமுகர்கள் உள்பட கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.