Perambalur: A resolution was passed at the VCK meeting demanding the repair of the Ranjankudi cemetery road!
பெரம்பலூர் மாவட்டம், ரஞ்சன்குடி கிராமத்தில் விசிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் வேர்களைத் (மக்களை) தேடி பயணம் நடந்தது. இதில் கிளைச் செயலாளராக சேகர், கிளை பொருளாளர் சத்தியராஜ் துணை கிளை செயலாளர்கள் தினகரன், கருப்பையா, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை கிளை செயலாளர் புகழேந்தி கிளை பொருளாளர் விக்கி, துணை கிளைச் செயலாளர்கள் மகேந்திரன், சந்தோஷ் மகளிர் விடுதலை இயக்கத்தின் கிளை செயலாளர் கண்மணி கிளை பொருளாளர் ஆனந்தி துணை கிளை செயலாளர்கள் பாஞ்சாலை மற்றும் சங்கீதா ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், அடிப்படை வசதிகளான தண்ணீர், சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி, ஏற்படுத்துதல், சமுதாய கூடம் அமைத்தல், நூலகம் அமைத்தல், மாயனத்திற்கு செல்லக்கூடிய சாலை அமைத்தல் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் மா.இடிமுழக்கம் ஒருங்கிணைப்பு செய்தார். மேலும் நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலாளர் சா.மன்னர்மன்னன், மாநில துணைச் செயலாளர் அண்ணாதுரை, மாநில துணைச் செயலாளர் கராத்தே.பெரியசாமி, மாவட்ட செய்தித் தொடர்பாளர் அழகுமுத்து, மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ரேணுகா வேல்முருகன், மாவட்ட அமைப்பாளர் அய்யம்பெருமாள், இஸ்லாமிய ஜனநாயக பேரவை சேர்ந்த சையது அலி, சித்திக் பாஷா, மாவட்ட துணை அமைப்பாளர் ராமர், மாவட்ட துணை அமைப்பாளர் ராக்கி (எ) கருப்பையா ஒன்றிய அமைப்பாளர் (தொ.அ) கோவிந்தராஜ் , இளஞ்சிறுத்தை எழுச்சிபாசறை (ஒ.து.அ) கண்மணிகண்டன், மற்றும் மேலும் இரஞ்சன்குடி கிராமத்தில் சேர்ந்த கூத்தப்பன், அஜீத், எல்.கே.மணி, து.கருப்பையா, மணியரசன், கோகுல், சாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.